Friday, September 25, 2009

இரவின் நிழல்..

இறந்தகால இரவு ஒன்றில்
நெல்லடிக்கும் களமேட்டில்
கயிற்று கட்டிலில்
வானம் பார்த்து படுத்திருக்க...


சிறுபருவத்தில் சோறுயுட்டிய அம்மாவின்
ஆள்காட்டி விரல்நுனியில் அறிமுகமாகி
அன்றுமுதல் இன்றுவரை ஆச்சரியமூட்டி
நாம் நடக்க நடக்கும் நிலா,
வான்வயலில்
காலம் விதைத்துவிட்ட
ஒளிரும் விதைகள்,
இலைதலை மணத்துடன்
குழந்தையின் மென்பரிசமாய்
வருடிச்செல்லும் தென்றல்,
அழியும் மனிதத்திற்க்காக
எப்போதாவது குரல்கொடுக்கும்
அரசியல்வாதிப்போல் அலறும் ஆந்தை,
புதிய ஜனனத்திற்க்காக
களவி செய்யும் உயிரினங்கள்.
உயிரினங்களின் மென்பேச்சிசை....

இப்படி பலமுறை பலதும்
உள்வாங்கி மயங்கி
இரவின் நிழலில் உறங்கியிருக்கிறேன்
நீங்களும் கூட...

இன்று அடர்ந்த கானகத்தில்
தாய் நடுக்காட்டில் இறந்துகிடக்க
சேய் கருவறைய்ல் சமாதியாகி
உணவும் நீரும் அறிதாகி
அருந்தினாலும் அகால மரணமென்பதால்
உதட்டையும் தொண்டையையும்
உமிழ் நீரால் நனைத்து
உடல்சிதறி உயிர் விலகாமலிருக்க
உருவம் காட்டாமல்
இதய சத்தத்தை மெல்ல மெல்ல அடக்கி
இங்கும் அங்கும் அல்லாடும்
எம் தொப்புள்கொடி உறவுகளின்
உன்னத உயிர்காக்கும் காலம்
இரவின் நிழல் காலம்..அதுமட்டும் வேண்டாம்..ஒன்றே குலம்

ஒருவனே தேவன்

யாதும் ஊரே

யாவரும் கேளீர்..

சுத்தமானபேச்சு

சுகாதாரமான கற்று

பகை,புகைய்ற்ற வாழ்வு.

அனைத்திடமும் அனைவரிடமும்

அன்புசெய்து,அன்புசெய்து

எதனிலும் இறையைக் காணல்..

உடுக்கை இழந்தவன் கைபோல

உறவுகள்.

தன் இனத்தை தானே அழிக்காத

விலங்கினும் மேலாய்

மனம் இதமுள்ள மனிதர்கள்..


நாடுகள் எல்லாம் காடுவளர்த்து

சிங்கைப்போல் எங்கும் பசுமை,

உள்ளமும் உலகும் குளுமை,

ஓசோன் என்னென்றும் வளமை...


மனிதத்தை மயானத்துக்கு அனுப்பி

இவையெல்லாம் அற்றுபோகச் செய்யும்

தொற்றுநோய்கள் எதுஎதுவோ

அதுமட்டும் வேண்டாம்...
Wednesday, September 23, 2009

அகல் விளக்கு..


குயவனுக்கும்
குழைந்த மண்ணுக்குமான
மகரந்தச் சேர்க்கை.

Tuesday, September 15, 2009

தம்பிவருவாரு..

வெள்ளதுல மாட்டிய
நெல்லுபயிராய்
வேலிக்குள்ள மாட்டி தவிக்கிறோம்..

மேலெயும் தண்ணி கீலேயும் தண்ணி
காட்டுவெள்ளத்துல மாட்டின இலையா
செத்து புள்ளமக்க மெதக்கையல
கர்பம் கலங்குதய்யா...

ஊரும்கேக்கல உறவும்கேக்கல
நாதியத்து நிக்கிறோம்
நட்டாத்து வெள்ளத்துல...

கழுத்தளவு தண்ணி
வாயளவு வந்துடுச்சி
பேசமுடியாம மூச்சுமுட்டுதய்யா
தப்பிபிழச்சா மிச்சகத சொல்லுறேன்...

கவலபடாதிங்க
தம்பிவருவாரு..

நம்பிக்கை..


நம்பிக்கை இருந்தால் உன்னால்
காற்று இல்லாத சூழ்நிலையிலும்
மூச்சுவிடமுடியும்...

நீ ஊமையாக இருந்தாலும்
முனகளைக்கூட
கீதமாக்கலாம்...

கை கூ....

வெடித்து சிதறுவது
மனித உடல்கள் அல்ல
மனிதம்.


000---000---000---000

படிக்கிறேன் எழுதுகிறேன்
சிந்திக்கிறேன் செயல்படுகிறேன்
சிலசமயம் அறிவற்றவனாய்.


000---000---000---000

உதிரமட்டுமா
பூக்கின்றது
பூ.

000---000---000---000

வெட்டி வீழ்த்த
மீண்டும் மீண்டும்
வெளிப்படுகிறது மிருகம்.

000---000---000---000

மலர் உதிர
காம்பில்
கனியாகும் காய்.

000---000---000---000

26-11-08 புதன்கிழமை
குரு பெயர்ச்சி
கூட்டணி மலர்ச்சி.

000---000---000---000

காட்டில் வேட்டை
புலிகளின் எண்ணிக்கை குறைகிறது
இந்தியாவில்.

000---000---000---000

ஹிட்லர்,முசோலினி,இடியமீன்
பார்த்தது இல்லை இப்போதுபுரிகிறது
இராஜபக்சே.

000---000---000

தூய்மை தூய்மை செய்வோம்
இடத்தை
இருப்பை.

000---000---000---000

Monday, September 14, 2009

திரு(என் மருமகளுக்காக)


 • திரு! இவள்
  தவமாய் தவமிருந்த நாங்கள்
  உள்ளம் மலர்ந்து
  உயிர் சீவிக்கவந்த
  ஊற்று நீர்...

 • ஆலிலை கிருஷ்ணணாய்
  அப்பாவின் மடியில் ஒய்யாரமாய்
  ஒப்பில்லா அழகுடன்
  தவழும் மஞ்சள் அழகி..


 • கண்ணம்,கைவளையலென
  அன்னையின் திருஷ்டிகழித்தலுடன்
  வாழ்க்கைத் தேடலுடன்
  வாஞ்சையாய் பார்க்கும்
  காந்தக் கண்ணழகி...

 • திருவின் அசைவுகள் அத்தனையும்
  புரியாதவர்களுக்கு செயல்
  புரிந்தவர்களுக்கு தத்துவம்...

Thursday, September 10, 2009

பரபரப்பு..

பெண்டாட்டி இருந்தும்
பெண்ணைப் பார்கையில்
பரபரக்கும் மனசு..

சா(தீ)தி...

சட்டென மதம் மாறினேன்
விட்டுவிலகாமல் இருக்கிறது
சாதி..

Tuesday, September 8, 2009

படி...


படி
படிக்கப் பழகு
உன்னையும் சேர்த்து..

Thursday, September 3, 2009

கருணாகரசு..

இவன் காந்தக் கவிதை
துருபிடித்த இதயங்களையும்
கவர்ந்து இழுக்கும்..

இவன் கவிதையில்
கற்பனை செம்பு கம்மியென்பதால்
கவிதையின்தரம் எப்பொதும்
"916"....


சிரம்சாய்த்து,குரலடர்ந்து,
கண்முரைத்து

பகடு பசாங்கு அற்ற
இவன் கவிதைவாசிப்பு
மாசற்றத் தாய்பால்..

பொதுவிழாக்களில்
விலகி ஒடாமல்
ஓடி ஆடி உதவிசெய்வதில்
இவன் உடுக்கை
இழந்தவன் கை...

பார்கதான் பலாப்பழம்
பழகப்பழக பலாசுளை
பழகலாம் வாங்க....

மனிதநேயம்..

சகமனிதன் சுடப்பட்டு
தலைசிதறி,இரத்தம்பரப்பி
நாதியத்து சாவதை
காணோலியில் காணூம்போது
மனிதம் எங்கேயிருக்கிறது
கவிதை எழுத...

மனிதநேய பண்பு மலரின்று
காகிதப் பூ..
துளைதூர்ந்துபோன
தூயப் புல்லாங்கூழல்.
கருக்கலில் கைவிளக்கில்லாமல்
தெருவில்தேடும் கன்னியப் பொருள்.
அக்கினி வெய்யலில்
ஆற்றில் ஆர்பரித்தொடும் காணல் நீர்..

சுயநலப்பற்று அற்றுப்போனால்
சுயம் விழித்து
எல்லாம் தழைக்கும்
மனிதநேயமும்...