Monday, December 28, 2009

இடம் விட்டு இடம்..

அன்புள்ள கயல்!
இடம்விட்டு இடம் நகர்ந்தும்
இந்தியாவில் நீ அகதி
இலங்கையில் நான் அகதி...

இடமும் பெயரும் மாறினாலும்
முகமும் , முகாமும் மாறவில்லை
புலிகள் அற்ற நாட்டில்
சொன்னநரியும் , கொன்றநரியும்
ஒப்பனையாய் பல்காட்டி
ஓட்டுக்கேட்கிறது பிச்சையாய்...

நகர்ந்த நம் உடன்பிறப்புக்கள்
நங்கூரம் பாச்சுவார்கள் உடும்பாய்
அப்போது ஆங்காங்கே
நரிகள் திசைதெரியாமல் ஓடும்
ஒப்பனைக்கலைந்து நாதியற்று சாவும்...

தாய் தமிழீழம் மலரும்
வசந்தம் வாசல்தோரும் வரும்
வருத்தப்படாதே சந்திப்போம் நாம்
நம்பிக்கையுடன்....






Saturday, December 19, 2009

நினைவுப் பருக்கைகள்...

மூடியக்கதவின் இடுக்கின் ஊடே
ஊடுருவும் ஒளிபோல
மனம் மூடிக்கிடந்தாலும்
உள்ளத்தில் ஊடுருவி விடுகிறாய்...

சுடு எண்ணெய்பட்டு வெடிக்கும் கடுகாய்
உன் சின்னச்சின்ன நினைவுகள்
பெரும் பிரளயத்தையே
உருவாக்குகிறது உள்ளமெங்கும்...

இருட்டு வெளியில்
ஓயாமல் இசைக்கும் இரவுப்பூச்சிகளாய்
உறங்கும் உள்ளத்தில் மெளனமாய் பேசி
கனவுகளில் கண்ணாமூச்சி ஆடுகிறாய்...

தூறலாய்,பெரும் மழையாய்
மாறிமாறி மனமண்ணில் விழுந்து
இளகச் செய்கிறாய்
பொழுது எதுவென்றும் பாராமல்...

சிறார்களின் சாப்பிட்ட இடமாய்
மனமெங்கும் இறைந்து கிடக்கிறது
உன் நினைவுப் பருக்கைகள்...

வேரோடு வெட்டி வீழ்தாமல்
தரையோடு வெட்டியதால்
போத்து போத்தாய் வெடிக்கிறது
நம் கடந்த காலங்கள்...


தமிழீழம்...

ஆணிவேர் அற்றுபோனபின்னும்
விழுதுகளால் நிமிர்ந்துநிற்க்கிறது
ஆலமரம் ஈழத்தில்...

Thursday, December 3, 2009

தோழனே...!

உதிரமட்டுமா
பூக்கிறது பூ...

பூவும்
காயாய்,கனியாய் பின்விதையாய்
மீண்டும் மீண்டும்
தன்னிருப்பை பதிவுசெய்ய...

நாம்
இறக்கமட்டுமா பிறக்கிறோம்?...