Saturday, June 19, 2010

    கரையோரம்....


ஆடிப்பெருக்கு ஆவணிஆவட்டம் கொண்டாடி
புள்ளையார வீதிசுத்தி ஆத்துலக்கரைச்சி
கார்திகை மார்கழியில விடிய விடியக்குளிச்சி
பொங்கலுக்கு மாட்டக் குலுப்பாட்டி கபடிவிளையாடி
மாசிமகத்தன்னைக்கு நல்லநாயருக்கு தீர்த்தவாரிசெஞ்சி
பங்குனி உத்திரத்திலக்கூட காக்காகுருவி குடிக்க
பொடவையாட்டம் தண்ணி ஓடுச்சி
ஊத்துத்தண்ணி உயிர்தண்ணியாச்சி
ஆத்தொடும் சேத்தோடும் எங்கவாழ்க்கப் போச்சு...

காடுமேடு எல்லாம் அழிஞ்சிபோச்சு
காரப்பழம் சூரப்பழம் கெலாப்பழமெல்லாம் போயெபோச்சு
குளம்குட்டையெல்லாம் மணையாயிடுச்சு
வாய்க்காமேடு ஏரிக்கறயெல்லாம் ஊடாயிடுச்சு..
மரமில்லாம மழையுமில்ல
மழவந்தாலும் தண்ணிவர வழியில்ல
பத்தாத்துக்கு மணலஅள்ளி, மணலஅள்ளி ஆத்த
பல்லாங்குழியா ஆக்கிபுட்டானுவோ பாதியிலப்போரவனுவோ...

எதிர்காலத்துல எம்பேரனுக்கு கதசொல்லுவேன்
இந்தகருவேலங்காடுதான் மணிமுத்தாறுன்னு
அப்ப மனுசன் உயிர்வாழரத்துக்கு
சாப்பாட்டுக்கு பதிலா மாத்திரைய முழுங்குவான்
காத்த முதுவுல கட்டிகிட்டு சுத்துவான்....

கரையோரமெல்லாம் மண்ட ஓட்டுக்கூட
மணலும் கெடக்கும்....