Monday, February 15, 2010

முதல் குழந்தை..


பெண்பார்த்து திரும்புகையில்
மண்பார்த்து நின்றபோதும்
பொயிட்டு வருகிறோம் என்றுசொல்ல
சட்டென கண்பார்த்து சிறுதலையாட்டி
உறவறியாமல் சம்மதம்தெரிவித்து
உள்ளம்நுழைந்தாள் அப்போதே...


இடம்விட்டு இடம்நகர்ந்து
இல்லத்தில் தீபமேற்றி
தானும் உணவு உண்டு
தண்ணீரையும் சுத்தம்செய்யும் மீனாய்..


அன்புடனும் அறமுடனும்
இனக்கமுடன் இல்லறம் நடாத்தி
இருகுழந்தை ஈன்றேடுத்து இயங்கும்
என்னவளே எனக்கு முதல்குழந்தை...

அமைச்சரும் அதிகாரியும் ...


அமைச்சரும் அதிகாரியும்
பட்டமரமாய் பார்த்து நிற்க
ஆம்புலசுக்காக அம்போவென
சாலையில் வெட்டுப்பட்டுக்கிடக்கிறது
சட்ட ஒழுங்கு....

(அம்மா சமுத்திரம் SI வெட்டிக் கொலை)