Saturday, December 19, 2009

நினைவுப் பருக்கைகள்...

மூடியக்கதவின் இடுக்கின் ஊடே
ஊடுருவும் ஒளிபோல
மனம் மூடிக்கிடந்தாலும்
உள்ளத்தில் ஊடுருவி விடுகிறாய்...

சுடு எண்ணெய்பட்டு வெடிக்கும் கடுகாய்
உன் சின்னச்சின்ன நினைவுகள்
பெரும் பிரளயத்தையே
உருவாக்குகிறது உள்ளமெங்கும்...

இருட்டு வெளியில்
ஓயாமல் இசைக்கும் இரவுப்பூச்சிகளாய்
உறங்கும் உள்ளத்தில் மெளனமாய் பேசி
கனவுகளில் கண்ணாமூச்சி ஆடுகிறாய்...

தூறலாய்,பெரும் மழையாய்
மாறிமாறி மனமண்ணில் விழுந்து
இளகச் செய்கிறாய்
பொழுது எதுவென்றும் பாராமல்...

சிறார்களின் சாப்பிட்ட இடமாய்
மனமெங்கும் இறைந்து கிடக்கிறது
உன் நினைவுப் பருக்கைகள்...

வேரோடு வெட்டி வீழ்தாமல்
தரையோடு வெட்டியதால்
போத்து போத்தாய் வெடிக்கிறது
நம் கடந்த காலங்கள்...


No comments:

Post a Comment