Monday, December 28, 2009

இடம் விட்டு இடம்..

அன்புள்ள கயல்!
இடம்விட்டு இடம் நகர்ந்தும்
இந்தியாவில் நீ அகதி
இலங்கையில் நான் அகதி...

இடமும் பெயரும் மாறினாலும்
முகமும் , முகாமும் மாறவில்லை
புலிகள் அற்ற நாட்டில்
சொன்னநரியும் , கொன்றநரியும்
ஒப்பனையாய் பல்காட்டி
ஓட்டுக்கேட்கிறது பிச்சையாய்...

நகர்ந்த நம் உடன்பிறப்புக்கள்
நங்கூரம் பாச்சுவார்கள் உடும்பாய்
அப்போது ஆங்காங்கே
நரிகள் திசைதெரியாமல் ஓடும்
ஒப்பனைக்கலைந்து நாதியற்று சாவும்...

தாய் தமிழீழம் மலரும்
வசந்தம் வாசல்தோரும் வரும்
வருத்தப்படாதே சந்திப்போம் நாம்
நம்பிக்கையுடன்....






1 comment:

  1. தங்களின் கவிதை
    நன்றாக உள்ளது தோழரே.

    நாமார்க்கும் குடியிளோம் நமனையஞ்சோம்
    என்ற திருநாவுக்கரசரின் பாடல் வரிகள் என்னுள் எப்போதும் ஒழிதுகொண்டிருகிறது.

    கார்த்திகேயன்

    ReplyDelete