வங்கக் கடலிலும் தத்தளிக்கிறது
உண்மை உடன்பிறப்புகளின்
உயிர்..
வாய்மையற்ற
நரியின் ஊளையாய் கேட்கிறது
தமிழருக்கான தமிழனின் குரல்...
கவிதையென சிலவரிகள் எழுதியவுடன்
நீர்த்துப் போய்விடுகிறது
நம்மன அரிப்பு..
பூவும்கூட புயலாகும்
தமிழகத் தமிழன்மட்டும் புழுவாய்...
No comments:
Post a Comment