Thursday, November 19, 2009

நம்பிக்கையுடன் வீரவணக்கம்..

சாம்பலில் இருந்து புறப்படும்
அக்கினிப் பறவையென
எம்மக்கள் மீண்டும் வருவார்
எட்டப்பர்கள்,இருசகோதர்களின்
எலும்பை இடம்பார்த்து உடைதெடுப்பார்
பிரித்தாலும் சதிகாரர்கள்
பின்னிய வலைகளை பிரித்தெரிவார்..

காலம்வருமென காத்துயிருக்காமல்
கானகப்புலியென வீருகொண்டு
எல்லாவகையிலும் பலம்கொண்டு
ஈழம் சமைப்பார்..

இனத்துக்காக இன்னுயிர்தந்து
வின்னுலகம்சென்ற் வீரமறவர்களுக்கு
வீரவணக்கம் செய்வோம்
நம்பிக்கையுடன்..

1 comment:

  1. ஆம்... நம்பிக்கையுடன் இருப்போம்.

    ReplyDelete